உலக முதலீட்டாளர்கள் மாநாடு:இனி தமிழகத்தில் அதிகரிக்கும் முதலீடுகள்

Default Image

விமான சேவை மூலமாக தமிழகத்தில் இனி  முதலீடுகள் அதிகரிக்கும்.

ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு:

தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: 

பின் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் எம்.சி.சம்பத் விளக்கம்:

பின்னர் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், சென்னையிலிருந்து டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீட்டாளர் மாநாட்டில் போடப்படக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்