வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயருமா?

வணிக சிலிண்டர் விலை உயர்வை அடுத்து, வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு LPG சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உயர்வுக்குப் பிறகு டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.3,071.50-க்கு சென்றுள்ளது. வெவ்வேறு நகரங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும் நிலையில், சென்னையில் ஏற்பட்ட உயர்வு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்வை அடுத்து, வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் விரைவில் உயரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், எரிபொருள் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹாஸ்டல், PG வாடகை உயர்வு
வணிக சிலிண்டர், விறகு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால், சென்னையில் ஹாஸ்டல் மற்றும் Paying Guest (PG) வாடகைகள் வரும் மே 5ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று ஐடி விடுதிகள் மற்றும் பிஜி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  • 4 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.6,500லிருந்து ரூ.7,500-ஆக உயர்த்தப்படும்.
  • 3 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.7,000லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும்.

விடுதி கட்டணம் உயர்வு, அறையில் உள்ள கூடுதல் வசதிகளைப் பொறுத்து மாறுபடும் என்றும், பொருளாதார சூழலைப் புரிந்துகொண்டு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த விலை உயர்வுகள் சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கணிசமாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயருமா?