திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு என்ன மரியாதை இருக்கு? - அன்புமணி ராமதாஸ்

திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு என்ன மரியாதை இருக்கிறது? 6 சீட்.. 7 சீட்டுன்னு கெஞ்சிகிட்டு இருக்கீங்க என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக வேட்பாளர் திருமாவளவன் குறித்து பேசுகையில்,“இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர் எதிரணியில் இருக்கும் வேட்பாளர். நான் அவரைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். தப்பு சொல்ல முடியாது. நல்ல மனுஷன். Recent-ஆ அவர் அங்க பக்கத்தில் நேவில் என்எம்சியில் வேலை செய்து retire ஆகியிருக்கிறார். அவரால் வர முடியவில்லை.

திடீரென்று கடைசி நேரத்தில் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இப்போ நான் கேட்பது என்னவென்றால், இந்தத் தொகுதி மக்கள் ஒரு முறை நம்முடைய அன்புச்சோழனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். எனக்கும் திருமாவளவனுக்கு என்ன பிரச்சனை? பிரச்சனையை உருவாக்குவது திமுக. திமுக இந்த இரண்டு சமூகங்களும் ஒன்றாக சேரக் கூடாது. இந்த இரண்டு சமூகமும் அடித்துக் கொள்ள வேண்டும், உரசிக் கொள்ள வேண்டும். அதில் குளிர் காய வேண்டும் என்பதுதான் திமுகவின் சூச்சி. அது திமுக ரத்தத்தில் இருக்கிறது. எப்போதும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடுவார்கள். இரண்டு சமூகத்தையும் அடித்துக் கொள்ள வைத்து வாக்கு வாங்குவார்கள். ஆனால் இப்போது சூழ்நிலை மாறியிருக்கிறது.திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். அவருக்கு அங்கே என்ன மரியாதை கிடைக்கிறது? ஏதாவது ஒரு சின்ன மரியாதை கூட திருமாவளவனுக்கு இல்லை. திருமாவளவன் இருந்ததால்தான் திமுக இத்தனை காலமாக MP, MLA ஜெயித்தது. பட்டியல் இன மக்கள் வாக்கு போட்டுதான் அவர்கள் ஜெயித்தார்கள்.ஆனால் இப்போது திருமாவளவன் நல்லவராக இருந்தும், அவர்கள் அவரிடம் ஆறு சீட், ஏழு சீட், எட்டு சீட் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரேமலதா வந்தாங்க பத்து சீட், ஒரு ராஜ்யசபா. அப்போது எதற்காக நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்? அந்தக் கூட்டணியில் உங்களுக்கு என்ன கிடைத்தது? பட்டியல் இன மக்களுக்கு திமுக என்ன செய்தது?நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது பட்டியல் இன மக்களுக்கு என்ன செய்தீர்கள்? ஏதாவது ஒன்று சொல்லுங்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி பட்டியல் இன மக்களுக்கு முதல் முதலில் அமைச்சர் பதவி கொடுத்தது. தலித் எழில்மலைக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. திமுக 1949-ல் தொடங்கிய கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி 1989-ல் தொடங்கிய கட்சி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிதான் 1998-ல் முதல் முதலாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக்கியது. திமுக அதை 1999-ல் செய்தது.அப்போது ஏன் நீங்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? மரியாதை இல்லை, சீட் இல்லை, கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள், அசிங்கப்படுத்தப்படுகிறீர்கள். இதுதான் நான் கேட்கும் கேள்வி” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.