பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் – அன்புமணி ராமதாஸ் இரங்கல். கடந்த 10 நாட்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சையா பலனின்றி காலமானார். இவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாமக கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
சென்னை திருவேற்காட்டில் பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா மாவட்டங்களை, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வரலாற்றுமிக்க இந்த சட்டத்தின் போது, சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் மாநிலங்களை உறுப்பினர் ஆகிறார். இந்த அறிவிப்பை பாமக மாநில தலைவர் ஜி .கே மணி அவர்கள் தெரிவித்துள்ளார். தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக […]
அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக உடன் கூட்டணி வைக்குமாறு ராமதாசிடம், பாமக தொண்டர்கள் வலியுறுத்தினார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. இந்த அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்பும் கிண்டலும் […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா செய்ய தான் தயார் என தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். முதல் நபராக, தான் ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்த அன்புமணி, தன்னை தொடர்ந்து மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். சிறுவாணி […]
இன்று தருமபுரி பாராளுமன்ற தோகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தோகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை பர்வையிட்டு ஆய்வுசெய்தார் பாமகவின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை’ எனத் தெரிவித்துள்ளார்.