துவக்க விழா போது இடிந்து விழுந்த சுவர்..மன்னிப்பு கேட்ட அமைச்சர்..! 

Two children were injured when the handle wall of the sloping floor suddenly collapsed in the crowd.

கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்ட நிலையில் அங்கு புதிய கட்டிடம் இல்லாததால் அங்கு உள்ள பழைய சமுதாய கூடத்தை தற்காலிகமாக அம்மா மினி கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து அந்த சமுதாய கூடத்திற்கு வர்ணம் பூசி அம்மா மினி கிளினிக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அந்த மினி கிளினிக்கை திறந்து வைக்க போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் மாற்று திறனாளிகள் செல்லக்கூடிய சாய்வு தரையின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் அங்கு இருந்த இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக அந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு அளித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.