கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்ட நிலையில் அங்கு புதிய கட்டிடம் இல்லாததால் அங்கு உள்ள பழைய சமுதாய கூடத்தை தற்காலிகமாக அம்மா மினி கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து அந்த சமுதாய கூடத்திற்கு வர்ணம் பூசி அம்மா மினி கிளினிக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அந்த மினி கிளினிக்கை திறந்து வைக்க போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் மாற்று திறனாளிகள் செல்லக்கூடிய சாய்வு […]
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். புதிய பஸ் பாஸ்கள் வழங்க முடியாத நிலையில் பழைய பஸ் பாஸ்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 […]
பேருந்தில் பயணிப்பவர்கள் ரூ.5 செலுத்தி முகக்கவசம் வாங்கி கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4-ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு, சென்னையில் […]
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததை அடுத்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம்,காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் ஓடும் என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். தற்போது தலைமை செயலகத்தில் பேட்டி கொடுக்கையில் அரசு பேருந்தில் வழக்கமாக கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கன்னியாகுமாரி பேருந்து நிலையத்திலுள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத் தொடங்கும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே […]
தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இதன் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது.தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும். […]
கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னையில் விரைவில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். சென்னையில் ஆயிரம் அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் ஏற்பட்ட விபத்து எதிர்பாராதது என்று தெரிவித்தார். பணிமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கியுள்ளார். மேலும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிமூலமும் மேம்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,சென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் .முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு சென்னையில் 80 பேருந்துகளும் தலா 10 பேருந்துகள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் இயக்கப்படும். கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.