விருதுநகர் பாலியல் வழக்கு- ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை...!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மைதிய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.