எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை,கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது -ரஜினிகாந்த் ட்வீட்
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை,கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிராக முதலில் அசாம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாளடைவில் தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
— Rajinikanth (@rajinikanth) December 19, 2019
இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது.தேசபாதுகாப்பு மற்றும் நாடு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.