நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி – இன்று வெளியாகும் அறிவிப்பு

As all parties are gearing up for the urban local elections, the announcement of the election date will be made today.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரம்காட்டி வரும் நிலையில், இன்று தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதும்கூட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனைதொர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரம்காட்டி வருகின்றன.

இதனைத்தொடர்ந்து விரைவில் தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிக்கு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை ரூ 4 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.