சென்னை : சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பை முடித்துவிட்டு, இன்று (டிச.1) நாடு (தமிழகம்) திரும்பியுள்ளார். இந்நிலையில், மூன்று மாதத்திற்கு பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலையை சென்னை விமான நிலையத்தில், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பின், முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து […]
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். சமீபத்தில், நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடி தொகுதியில் விஜய் போட்டியடுவார் என தகவல் வெளியானது. பின்னர், விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது, விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.இதனால்,அனைத்து பகுதிகளிலும் இன்று மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. […]
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பங்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இடமாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மார்சிஸ்ட் […]
நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரம்காட்டி வரும் நிலையில், இன்று தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல். தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதும்கூட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனைதொர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 […]
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு. 2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்டியிருந்தது. ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், தற்போது 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, […]
2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி அவர்களும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் அவர்களும் வெற்றி பெற்றனர்.எனினும்,இருவரும் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால்,தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர். இந்த நிலையில்,2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திங்களன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு […]
சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கோட்டையாக மாற்றியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது.இதில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது.மூன்றாவது அணியாக களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக 1996 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றி ஒரு […]
தமிழகத்தில் தற்போது சூலூர் ஓட்டப்பிடாரம் திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதனை போலீசாரும், தேர்தல் ஆணையமும், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க கண்காணித்து வருகின்றனர் சற்று முன்னர், சூலூர் பகுதியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அதனை சரி செய்ய சிறிது நேரம் ஆகும் என்பதால் வாக்குபதிவு சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர் DINASUVADU
மக்களவை தேர்தல் நாடு முழுதுவம் பரபரப்பாக இயங்கி வருகிறது தேர்தல் ஆணையம். மாற்றும் பறக்கும் படையினர். ஒரு நபர் குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் பணம் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்ல கூடாது அவ்வாறு கொண்டு சென்றால் உரிய ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி டெல்லி விமான நிலையத்திருந்து அதிமுக எம்பி ஏழுமலை 20 லட்சம் ரூபாயை கொண்டு வந்துள்ளார்/ இதனால் அவரை பிடித்து வருமானத்துறையினர் விசாரித்தனர். பிறகு அவர் தனது மகளின் மேற்படிப்பு செலவிற்காக […]