இன்று தமிழகம் வருகிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

It has been reported that Union Health Minister Harsh Vardhan is coming to Tamil Nadu today corona vaccine dry

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று  தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.ஆகவே நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் பகுதிகளில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளது.நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று  தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை , டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.