இரண்டாவது நாளாக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் கைது !

Udayanidhi Stalin has been re-arrested during the second day of the campaign today.

இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்கி வைத்தார்.இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து தொடங்கிய உதயநிதி,அங்குள்ள மீனவர்களை சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் . அதனையடுத்து அங்குள்ள மீனவரின் மீன்பிடிப் படகில் ஏறி சிறுது தூரம் கடலுக்குள் சென்று விட்டு கரை திரும்பிய அவர் பிரச்சாரத்தை தொடங்கினார் .

அப்போது 200-க்கும் மேற்பட்ட போலீசார் உதயநிதி மற்றும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவாணன், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்ட பல திமுக முன்னணிப் பிரமுகர்களை தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளனர்.