சுங்கக் கட்டணம் உயர்வு – டிடிவி தினகரன் கண்டனம்!

TTV Dhinakaran tweeted condemning the increase in customs duty from midnight at 24 customs posts in Tamil Nadu.

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து ட்வீட்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இந்தாண்டும் தமிழகத்தில் உள்ள சென்னை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர் சூரப்பட்டு உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது.

எனவே, உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

unknown node