காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் – லாரி உரிமையாளர்கள் ..!

Lorry Owners Association called for an indefinite strike on the 27thThe decision was taken agreement with the Chennai Transport Authority.

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

27-ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்த நிலையில் தற்போது அந்த போராட்டம் திரும்பப் பெற்றது. சென்னை போக்குவரத்து அதிகாரிகள் உடன் நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து ஜிபிஎஸ் வேகக்கட்டுப்பாட்டு கருவியை வாங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்புக்கும்,  டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.