திருச்சியில் விசாரணை கைதி சாவு!!

சண்முகம் இவர் கரூர்  மாவட்டம் குளித்தலை அருகே உள்ள  ஏலநொச்சிமலையை சேர்ந்தவர். கடந்த  6ம் தேதி அப்பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து  சண்முகத்தை

திருச்சி: சண்முகம் இவர் கரூர்  மாவட்டம் குளித்தலை அருகே உள்ள  ஏலநொச்சிமலையை சேர்ந்தவர். கடந்த  6ம் தேதி அப்பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து  சண்முகத்தை  கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில்  அடைத்தனர். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  சண்முகத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென உடல் நலக்குறைவு  ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி அரசு  மருத்துவமனைக்கு சிறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு  கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட சண்முகத்திற்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம்  சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.