ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

The Tamil Nadu government has issued a surprise order transferring 7 IPS officers in Tamil Nadu.

தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரை கண்ணன், சென்னை சைபர் க்ரைம் பிரிவு -1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர், TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக பிராஜ் கிஷோர் ரவி, ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி மற்றும் இயக்குனராக டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமரேஷ் புஜாரி, சென்னை தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல், காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.