ராணிப்பேட்டையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி செல்வதால் அதை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.