சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இங்கு அமைய உள்ள இந்த ஆலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணிப்பேட்டையில் அமையவுள்ள இந்த நிறுவனம் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, […]
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி செல்வதால் அதை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு நிகழ்சிகள் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் சென்ற நிலையில்,16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார்.மேலும்,திருப்பத்தூரில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தையும் முதல்வர் திறத்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து,வேலூரில் ரூ. 53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்தார். அதன்பின்னர்,வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் […]
ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் தமிழகத்தில் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, தற்போது ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனை தொடர்ந்து, வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. இதனால், இன்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை […]
தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 36 வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை. தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் திருப்பத்தூர் ,ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. இன்று முதலாவதாக திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இதற்கு பின் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெற்றது.தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு […]
தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து […]
வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி இன்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில் வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் கோட்டங்கள் : வேலூர் குடியாத்தம் வேலூர் தாலுகாக்கள்: வேலூர் அணைக்கட்டு காட்பாடி குடியாத்தம் பேரணாம்பட்டு கே.வி.குப்பம் (புதிது) திருப்பத்தூர் வருவாய் கோட்டங்கள் : திருப்பத்தூர் வாணியம்பாடி திருப்பத்தூர் தாலுகாக்கள் : […]
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரை பிரித்து வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாகவும், நெல்லையை பிரித்து நெல்லை,தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.