கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக அண்மையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை டிசம்பர் 22ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் விதித்து முபின் என்பவர் உயிரிழந்தார். அந்த சிலிண்டர் விபத்தின் பின்னணியில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கருதி இந்த வழக்கு சென்னை காவல் துறையினரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிடம் சென்றது.
என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு சம்பந்தமாக 6 கைதாகி விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை விவரங்கள் சென்னை பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், அண்மையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் நீதிபதி அமர்வு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை டிசம்பர் 22ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி உத்தரவு பிறப்பித்துள்ளளது.