திருவண்ணாமலை கோவில் – மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை!

Corona restrictions ban on Pavurnami festival at Thiruvannamalai temple

கொரோனா கட்டுப்பாடுகளால் திருவண்ணாமலை கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை.

திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலையில் வரும் 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.