#Breaking: "வாக்கு எண்ணிக்கை நாளில் கட்டுப்பாடுகள் கிடையாது"- தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

With the new restrictions imposed in Tamil Nadu, the Chief Electoral Officer said that there will be no restrictions on May 2, vote counting day.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதி வரை தான் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.