இளம் பெண்ணை கடத்தி தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்டு சித்ரவதை செய்த மர்மநபர்கள்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- தூத்துக்குடியில் மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது.
- பின்னர் கண் திறக்க முடியாமல் சோர்ந்த நிலையில் காணப்பட்ட பெண், தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் காணப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த கணவன் சக்திவேல், மனைவி வசந்தா இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் ஒரு மகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள தாய் வசந்தா வீட்டுக்கு சென்றுவிட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, கலைச்செல்வியை மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. கண் திறக்க முடியாமல் சோர்ந்த நிலையில் காணப்பட்ட அந்த பெண்ணை அருகில் இருந்தவர் மீட்டு, காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, தன்னை மர்ம நபர்கள் சிலர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறினார்.
இதுகுறித்து குலசேகரம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது? அந்த நபர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)