தங்கம் வாங்க சரியான நேரம்! அதிரடியாக குறைந்த விலை!

22 காரட் தங்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 400-ம், 18 காரட் தங்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது நகை வாங்கத் திட்டமிட்டவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Hero Image

சென்னை : தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்று (ஜூலை 17) நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாகக் குறைந்துள்ளன. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை சரிவு 22 காரட் தங்கத்திற்கு மட்டுமல்லாது, 18 காரட் தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 10,920-க்கும், ஒரு சவரன் ரூ. 400 குறைந்து ரூ. 87,360-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் இன்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 குறைந்து ரூ. 235-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 5,000 அதிரடியாகக் குறைந்து ரூ. 2.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியான விலை மாற்றங்களால் தவித்து வந்தநகைப்பிரியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இன்றைய இந்த விலை வீழ்ச்சி பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தங்கத்தின் தேவை மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாறும் இந்த விலை மாற்றம், இன்றும் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது.

தங்கம் வாங்க சரியான நேரம்! அதிரடியாக குறைந்த விலை!