#Breaking:புழல் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறப்பு!

The puzhal lake was flooded by continuous rain , 500 cubic feet of surplus water per second was opened

புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,தொடர் மழையால் புழல் ஏரி நிரம்பிவருகிறது.இதனால்,21.20 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 19.40 அடியாக உயர்ந்துள்ளதால்,அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும்,புழல் ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், உபரிநீர் திறப்பும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,கரையின் இருபுறமும் இருக்கக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.