சர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு ! ரவீந்திரநாத் எம்.பி. கல்வெட்டு நீக்கம்

தேனியில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று  இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது

தேனியில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று  இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

unknown node

மேலும்  தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,அமமுக வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இருந்து  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமாரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பன்னீர்செல்வம்  கடும்பத்தினர் அனைவரது பெயரும் அதில் மறைக்கப்பட்டுள்ளது.