பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதற்கு, 15 நாட்களுக்கு முன்பதாக தேர்வுகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள், அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனையடுத்து, 8,9,10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், தற்போது நடத்தப்படும் செய்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும். தமிழகத்தில் மே-5 முதல் தொடங்கவிருந்த பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதற்கு, 15 நாட்களுக்கு முன்பதாக தேர்வுகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.