Tamil News Today Live : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7.72 லட்சம் மாணவ மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்னும் பல்வேறு நேரலை நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
12th Exam : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இதில் நான்கு 4.13 லட்சம் மாணவியர்கள் 3.52 லட்சம் மாணவர்கள் ஒரு திருநங்கை ஆகியோர் தேர்வு எழுத உள்ளனர். மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 21,875 தனி தேர்வர்களும், 125 சிறைவாசிகளும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத […]
திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு (return exam) ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்திருந்தார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும். இதுபோன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு […]
10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம். தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு (return exam) ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும். இதுபோன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் […]
உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவன், கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவனுக்கு, பிறந்ததிலிருந்தே இரண்டு கைகளும் செயல்படவில்லை. இந்நிலையில், துஷார், 12-ம் வகுப்பில், தனது கால் விரல்களால், தேர்வெழுதி 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதுகுறித்து, துஷார் கூறுகையில், பிறந்ததிலிருந்து என் இரண்டு கைகளும் செயல்படவில்லை, ஆனால் நான் அதை ஒரு குறைபாடாக ஒருபோதும் கருதவில்லை. என் மூத்த சகோதரர்கள் […]
தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வை என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம். நீட் தேர்வை நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இருப்பினும் மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து […]
+2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், +2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா..? அல்லது வேண்டாமா […]
வாட்ஸ்அப் மூலம் அலகு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது செய்முறை தேர்வுகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்படி நடத்துவது […]
பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதற்கு, 15 நாட்களுக்கு முன்பதாக தேர்வுகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள், அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து, 8,9,10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு தேர்வுகள் […]
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, செய்முறை தேர்வுகள் இன்று துவங்குகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து கொரோனா காரணமாகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, செய்முறை தேர்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் , நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து தேர்வுகள் நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான […]
பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் மே 3-ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், இது […]
10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முதலில் நடைபெறும், அதன் பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று அவர் கூறினார். தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மேற்கு வங்க உயர்கல்வி கவுன்சில் பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு […]