விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்...! போராட்டம் வெற்றியடைய வேண்டும்....! – கமலஹாசன்

The demands of the farmers must be met. Kamal Haasan tweeted that the struggle should be successful.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும்,  விவாசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்றுடன் பிரதமர் மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு, மேற்கு வங்க முதல்வர், டெல்லி முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node