சுடுகாடு இருந்த இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ..!

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயா நகரில் உள்ள விஜயலக்ஷ்மி என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இரவு இறந்து உள்ளார்.அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.
அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.சுடுகாடு இருந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்தது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடலை புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு சர்வேயரை வைத்து அதிகாரிகள் நிலத்தை அளந்து பார்த்தபோது இந்த இடம் சுடுகாடு இல்லை பக்கத்தில் இருப்பதுதான் சுடுகாடு என அதிகாரிகள் கூறினர்.மேலும் பக்கத்தில் உடலையை அடக்கம் செய்யுமாறு அதிகாரிகள் கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 40 ஆண்டுகளாக இந்த இடத்தில் தான் உடலை அடக்கம் செய்து வருகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து திருவள்ளூர் வட்டாச்சியர் இந்த இடத்தில் உடலை புதைக்கக்கூடாது அப்படி புதைத்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை கொடுத்தார்.இதனால் அந்த மூதாட்டியின் உடலை அருகில் புதைத்து விட்டு சென்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025