தஞ்சை அரசுப் பள்ளி ஆசிரியர் குத்திக்கொலை! கொலை செய்த நபர் கைது!

தஞ்சாவூரில் பணியில் இருந்த அரசு ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tanjavur teacher Issue

தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் சின்னமணி பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகளான 26 வயது நிரம்பிய ரமணி அதே பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த அவர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் முதற்கட்ட தகவலின்படி, மதன் என்பவர் ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால் ஆத்திரம் தாங்காத மதன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியை ரமணி வகுப்பறையில் பாடம்  நடத்திக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் வந்த மதன், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தி இருக்கிறார். இதனால், காயமடைந்த ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்த மதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்