தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால் ஆத்திரம் தாங்காத மதன் கொலை செய்ததாக முதற்கட்ட தகவலின்படி கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் […]
தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் சின்னமணி பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகளான 26 வயது நிரம்பிய ரமணி அதே பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த அவர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த […]
தஞ்சாவூர் : புதுக்கோட்டையில் உள்ள கந்தர்வ கோட்டை கண்ணுகுடிபட்டியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது வளம்பக்குடி பகுதியில் அமைந்திருக்கும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகிருக்கிறது. இந்த கோர விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 […]
ஆன்மீக சுற்றுலா : சென்னை, தஞ்சாவூர். கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு நடைபெறும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள், அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் […]
MK Stalin: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தஞ்சை மற்றும் நாகையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை 34 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு […]
தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு காரில் 11 பேர் வேளாங்கண்ணி சென்றுள்ளனர். தஞ்சாவூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். வேனில் இருந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த […]
தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்படி சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி ஆகிய 4 பேரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு காரில் 11 பேர் வேளாங்கண்ணி சென்றுள்ளனர். நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டில் வந்த வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி! வேனில் […]
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞரும், நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு ஐஸ்வர்யா பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் 31-ம் தேதி தேதி பல்லடம் அருகே ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே வீடு எடுத்து […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மீது ஜேசிபி இயந்திரம் களமிறக்கப்ட்டு விளைநிலங்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புறவழிசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கமான ஒன்று. அப்படி கையகப்படுத்துவதில் விலை நிலங்களும் அடங்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விலை நிலங்களில் நடவு செய்யப்பட்டு இருந்தது. நடவு செய்து 60 நாட்களே ஆன நிலையில் தற்போது […]
வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவு. தஞ்சை சாஸ்த்ரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதா? என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு […]
தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம். இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் […]
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால், அப்போது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு […]
கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை மர்மநபர்களால் அடித்துக் கொலை. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 3-ஆவது திமுக கவுன்சிலர் அத்திஜா பீவியின் தந்தை முகமது ரசாக், பாபநாசம் அருகே மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.
தஞ்சை:எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை வடக்கு வீதியில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் இரண்டடியிலான திருவுருவச் சிலை மர்ம நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கு,அதிமுக இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து,சிலையை சேதப்படுத்திய […]
தஞ்சையில் பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை. அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா். மதம் […]
தஞ்சையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா். மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு […]
ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரும்,மிகச் சிறந்த அரசர்களில் ஒருவருமான ராஜராஜசோழன் அவர்கள்,தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டினார்.இதன்மூலம்,ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது சிறப்பு ஓங்கி நிற்கிறது.இதன்காரணமாக, உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார்.இவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,ராஜராஜசோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் […]
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் மாகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் சிறந்த மாகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தின விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25 […]
தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அதன் காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்போது ஆடி கார்த்திகை வரும் காரணத்தால் பக்தர்கள் கோயில்களுக்கு செல்லக்கூடும் என்பதால் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கோயில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளது. இதில் தஞ்சை […]
தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை அடுத்து தொற்று குறைந்திருக்கும் மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொற்று அதிகமாக பாதித்த மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கொரோனாவின் அலை வேகமாக பாதித்த நாட்களில் தஞ்சாவூரில் நாளொன்றுக்கு 1000 தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட […]