சிறந்த மாநிலமாக தமிழகம் நம்பர்-1.!அனைவரதும் அயராத உழைப்பே காரணம்-முதல்வர் பழனிச்சாமி.!

The CM said that he would like to present the award to all for the third consecutive time that Tamil Nadu has topped the list of best states.

சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து தமிழகம் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்ததை ஒட்டி வழங்கப்படும் விருதினை அனைவருக்கும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் சிறந்த மாநிலங்களின் பட்டியலை, இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக என இந்தியா டுடே கூறியுள்ளது.

மேலும் இந்தியா டுடே சார்பில், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு இந்தியா டுடே சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தை முதல் இடமாக தேர்ந்தெடுத்த இந்தியா டுடே இதழுக்கு தமிழக அரசு சார்பில் நன்றியை தெரிவித்த முதல்வர்,அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

unknown node