சூரியூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு ...!

A cow has died during a jallikkattu show held at Periyasooriyoor in Trichy.

திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 29 வயது மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் பொழுதும் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.