Tag: ஜல்லிக்கட்டு போட்டி

650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி […]

jallikattu 5 Min Read
puthukottai jallikattu

சூரியூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த […]

#Death 2 Min Read
Default Image

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி – அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே அனுமதி என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகளுக்கு டோக்கன் வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டுமாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.  

jallikkattu 2 Min Read
Default Image

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு, இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

HIGH COURT 2 Min Read
Default Image

கோயில் திருவிழாவினை ஒட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜல்லிக்கட்டு..!! போட்டி களைக்கட்டியது..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே, கோயில் திருவிழாவினை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பில் தொடங்கியுள்ள ஜல்லிக்கட்டில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 350 காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 200 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர். வாடிவாசல் வழியே சீறிப்பாயும் காளைகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பீரோ, கட்டில், தங்கக் காசுகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட உள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

விருதுநகர் மாவட்டம் 2 Min Read
Default Image