விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனு ஏற்பு..! விரைவில் விடுதலையா ..?

Sudhakaran, who was arrested in a case of embezzlement, has been granted bail by the Bangalore Special Court.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவர்களில் மூன்று பேரின் தண்டனையை வருகிற பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானசுதாகரன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டிசுதாகரன் மனுதாக்கல் செய்துள்ளார்.

சுதாகரன் செலுத்திய ரூ.10 கோடி அபராதத்தை நீதிமன்றம் இன்னும் ஏற்காமல் உள்ளதால், அபாரத தொகையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டால் சிறையிலிருந்து ஓரிரு நாளில் சுதாகரன் விடுதலையாக வாய்ப்புள்ளது எனவும்சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் எந்த நேரத்திலும்சுதாகரன்விடுதலையாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.