சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி.!

tudents have been given permission to travel on Chennai electric trains Railway Department will be from tomorrow.

சென்னை மின்சார ரயிலில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளுக்கும்  நாளை முதல் அனுமதி என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும், பயணம் செய்ய அதற்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும் எனவும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, தெற்கு ரயில்வே புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து, ஒரு நாளைக்கு 244 ரயில்களை இயக்குகிறது. இது, கொரோனாவுக்கு முந்தைய மட்டத்தில் 40% ஆகும்.

இதற்கிடையில், நேற்று சென்னை மின்சார ரயிலில், வரும் 23 ஆம் தேதி முதல் அனைத்து பெண் பயணிகளுக்கும் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரயில்வே ஊழியர்களைத் தவிர, பெண்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறையில் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ரயில்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.