மாணவி மரண வழக்கு; பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு.
கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் சிபிசிஐடி காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் இன்று காணொளி வாயிலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.