கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்கக் கோரிய தந்தை கோரிக்கை நிராகரிப்பு. கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை காவல்துறைக்கு பதில் வழக்கறிஞரிடம் ஒப்படைக்க உத்தரவிட இயலாது என்று மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் உயர்நீதிமன்றம். செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது, அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயார் என தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். மாணவியின் செல்போன் பெற்றுக்கொள்ள அரசு வழக்கறிஞர் மறுத்ததுடன், விசாரணை அதிகாரிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக உள்ளதாக […]
ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. பிள்ளைகள் மீதான கடமை, பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேண செய்யும் ஆசிரியர்களை குறை சொல்ல கூடாது. ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்யமாட்டார்கள். எனவே, மாணவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் […]
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு. கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் சிபிசிஐடி காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]