கொளத்தூரில் ஸ்டாலின்...சேப்பாக்கத்தில் உதயநிதி! திமுக வேட்பாளர் பட்டியல் இதோ!

Hero Image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 164 வேட்பாளர்களில் 60க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளன.

இது திமுகவின் புதிய தலைமுறை வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவாகப் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் 18 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.வேட்பாளர்களின் கல்வித் தகுதியில் சிறப்பான பிரதிநிதித்துவம் உள்ளது. 125 பேர் பட்டம் பெற்றவர்கள், 7 பேர் முனைவர்கள் (Ph.D), 15 பேர் மருத்துவர்கள், 17 பேர் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் 29 பேர் சட்டம் படித்தவர்கள் ஆவர்.

கடந்த தேர்தலை போலவே, இந்த முறையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகனும் துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும், அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

திமுகவின் சில முக்கிய வேட்பாளர்கள் வருமாறு:

  • நாகர்கோவில் - ஆஸ்டின்
  • ராதாபுரம் - அப்பாவு
  • பாளையங்கோட்டை - அப்துல் வகாப்
  • திருநெல்வேலி - சுப்பிரமணியன்
  • திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
  • தூத்துக்குடி - கீதா ஜீவன்
  • மதுரை மத்திய - பி.டி.ஆர். தியாகராஜன்
  • திருச்சி மேற்கு - கே.என்.நேரு
  • திண்டுக்கல் - ஐ. பெரியசாமி


unknown node


வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிறகு மு.க.ஸ்டாலின், “இது வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி” என்று வலியுறுத்தினார். மேலும், நாளை மாலை 5 மணிக்கு திமுகவின் தேர்தல் அறிக்கை (Manifesto) வெளியிடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த வேட்பாளர் அறிவிப்பு திமுகவின் தேர்தல் தயாரிப்புகளுக்கு வேகம் கொடுத்துள்ளது. 60க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் மற்றும் கல்வியறிவு உயர்ந்த வேட்பாளர்களின் பட்டியல், திமுக தனது புதிய உருவத்தை மக்களுக்கு காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.