இறுதி அஞ்சலியில் குமுறி குமுறி அழுத ஸ்டாலின்,துரைமுருகன் ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு மரணமடைந்தார். இதையடுத்து மருத்துவமனயிலிருந்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மாலை 4 மணிக்கு மேல் அன்பழகன் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், எம்.பி, கனிமொழி டிஆர் பாலு, உதயநிதி , வைரமுத்து உள்ளிட்ட பலர் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர். பின்னர் க. அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்தை அடைந்தது. அங்கு அன்பழகனின் உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது.
அப்போது அன்பழகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் கனிமொழி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.அப்போது அன்பழகனை தொட்டு வணங்கிய போது துக்கம் தாளாமல் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் இருவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.இதையடுத்து அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)