சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் ! கூடுதல் கால அவகாசம் தேவை- எம்.எல்.ஏ பிரபு மனு

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மனு அளித்துள்ளார்.

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மனு அளித்துள்ளார்.

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் சபாநாயகர் அனுப்பிய  நோட்டீசுக்கு 7 நாட்களில்  எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் மனு அளித்துள்ளார்.