சென்னையில் இன்று முதல் 80 சதவீத புறநகர் ரயில்கள் இயங்கும்- தெற்கு ரயில்வே!

Southern Railway has announced that 80 per cent of suburban trains will run in Chennai from today, bringing the total running trains to 500.

சென்னையில் இன்று முதல் 80 சதவீத புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது.

அதனைதொடர்ந்து, அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் காலை 7 முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் தற்பொழுது 410 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி 500 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கம் அளவு 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.