வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.5ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் […]
டெல்லி:தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளிக்கும் இந்திய ரயில்வே துறையானது,தற்போது ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கீழ் தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதற்கான உரிய வாடகைக் கட்டணங்களை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ […]
சென்னையில் இன்று முதல் 80 சதவீத புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது. அதனைதொடர்ந்து, அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் […]
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பின்னர், அனைத்து மக்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்கள், காலை […]
வழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை மின்சார ரயில்கள் இயங்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவையை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் சென்னையில் இருந்து தஞ்சாவூர்,திருச்சி,கொல்கத்தாவிற்கு தினசரி சிறப்பு ரயில் அக்.,26முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் 40 ஜோடி சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதியிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.இதனிடையே நேற்று தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது […]
அரக்கோணம் to கோயம்புத்தூர் , திருச்சி to செங்கல்பட்டு வரைஇன்டர்சிட்டி ரயில் இயக்க அனுமதி தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 -ம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது. மேலும், திருச்சிலிருந்து, செங்கல்பட்டு […]
ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1 முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த […]
ஜூலை 1 முதல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் இரவு 8.40 மணிக்கு பதில் 8.45க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் அதிகாலை 5.45க்கு பதில் 5.30க்கு மதுரை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதில் 03.20க்கு […]