டெல்லி :புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கருடா கேட் அருகே இன்று (ஆகஸ்ட் 22, 2025) காலை 6:30 மணியளவில், ஒரு மர்ம நபர் சுற்றுச்சுவரை மரத்தின் உதவியுடன் தாண்டி, இரயில் பவன் பக்கமாக உள்ளே நுழைந்ததாக குதிப்பதை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஊழியர்கள் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பாதுகாப்புப் படையினர் அந்த நபரை உடனடியாகப் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இது நாடாளுமன்ற பாதுகாப்பில் ஒரு முக்கியமான குறைபாடாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்ற நபர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த நபர் எந்தப் பையையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விசாரணையின் போது, அவர் மனநிலை சரியில்லாத ஒருவருடன் ஒத்துப்போகும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
