கோவை சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குற்றவாளி என தீர்ப்பு.!

Default Image
  • கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவர் கைது  செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட  சந்தோஷ்குமார் குற்றவாளி என நீதிபதிகள் கூறி தீர்ப்பளித்தனர்.

கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த  மார்ச் மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார் .அப்போது அந்த சிறுமி காணாமல் போனார். இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தயார் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை இதை தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையெடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கினர். பின்னர் 27-ம் தேதி அந்த அவர் வீட்டின் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததது.

இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி போலீசார் நடத்திய விசாரணை மூலம் அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது  செய்யப்பட்டார்.இந்த வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால்  தீர்ப்பு இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக  சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் நேற்று தெரியவந்து உள்ளது.

இதையெடுத்து சிறுமியின் தாய் நேற்று தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சந்தோஷ்குமார் குற்றவாளி என கூறி தீர்ப்பளித்தனர்.

சந்தோஷ்குமார் தண்டனை குறித்து  3 மணியளவில் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் சிறுமியின் தாய் நேற்று சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக  தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்