மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி! 

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

Salem Govt School teacher suspended

சேலம் :பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், மாணவர்களை அதிலும் அரசு பள்ளி மாணவர்களை வேலை வாங்கும் நிகழ்வு என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிழக்கு ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ் என்பவர் , பள்ளி மாணவர்களை கால் அழுத்திவிட கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து மாணவர்கள் அவருக்கு கால் அழுத்தி விட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

இதனையடுத்து, சேலம் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் ஷபீர், ஆசிரியர் ஜெயபிரகாஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி ஆசிரியர் ஜெயபிரகாஷிற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.