லண்டன் சென்றுவிட்டு மனைவியை பார்க்க தாயகம் திரும்பியவர் பற்றி வதந்தியை கிளப்பிய விஷமிகள்!

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களை விட, பாதிக்கப்படாதவர்கள் தான் அதிகம் பயப்பட

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களை விட, பாதிக்கப்படாதவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டி உள்ளது. ஏனெனில்  அது குறித்த வதந்திகள் அதிகம் கிளம்பி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தனது மனைவியை பார்க்க  தாயகமாகிய தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர் தான் பொறியாளர் சூரியநாராயணன்னின் மகன் ஆனந்த். இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சிறு வேலை காரணமாக லண்டன் சென்றுவிட்டு கடந்த எட்டாம் திகதி பெங்களூருக்கு வந்துள்ளார். அதன்பின் தனது சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்கு தனது மனைவியை பார்ப்பதற்காக இவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் வந்தபொழுது, இவருக்குகொரோனா தோற்று இருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டு அவரை மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

unknown node

இது தொடர்பாக அவர் போலீசில் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பின்பு அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை குழுவினர் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து, அதன் பின்பு ஆனந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் வதந்திகளை கிளப்பி விட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.