“பணியின்போது உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்!”- முதல்வர் பழனிச்சாமி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் 25 காவலர்கள் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணியின்போது காவலர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பணியில் இருக்கும்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, பணியின்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு#EdappadiPalaniswami | #TNGovt pic.twitter.com/ge4j5lw4KI
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 6, 2020