தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் 25 காவலர்கள் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணியின்போது காவலர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பணியில் இருக்கும்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பணியின்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த […]
பிரதமர் மோடி, திருக்குறள் குறித்து கூறியதால், தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் என தெரிவித்த அவர், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. என தெரிவித்தார். மேலும், இந்தியாவில் உள்ள […]
திருச்சியில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவபொம்மையை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பேரூந்துநிலையத்தில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமியின் உருவப்படத்தை தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ரகு என்பவர் எரித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகு மீது தேசத்துரோக வழக்கு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். முதல்வரின் உருவ பொம்மையை எரித்த சம்பவம், அங்கு […]
கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.