அருப்புக்கோட்டையில் ராஜேந்திர பாலாஜி உருவபொம்மை எரிப்பு..!

DMK workers burnt a statue of Minister Rajendra Balaji in Aruppukottai today to condemn MK Stalin's slanderous criticism of the DMK.

நேற்று விருதுநகரில் செய்தியாளர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று அருப்புக்கோட்டையில் மு.க.ஸ்டாலின், திமுகவை அவதூறாக விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர். பின்னர், காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை அணைத்து கைப்பற்றி, திமுகவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.